பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2014



கப்பல்துறை அமைச்சர் ஆகிறார்  பொன்.ராதாகிருஷ்ணன்!
நரேந்திரமோடி இன்று மாலையில் பிரதமராக பதவி ஏற்கிறார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள்.


தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பா.ஜனதா எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் மந்திரி பதவி வழங்கப்படுகிறது. மாலையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அவரும் பதவி ஏற்கிறார்.
இந்தியாவின் தென்கோடி தொகுதியான கன்னியாகுமரியில் இருந்து வெற்றி பெற்றுள்ள பொன்.ராதா கிருஷ்ணன் ஏற்கனவே வாஜ்பாய் மந்திரி சபையில் 1999 முதல் 2004 வரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.
மோடி மந்திரி சபையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கப்பல் துறை வழங்கப்படும் என்று தெரிகிறது.