பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014

ரோஜாவிற்கு வெற்றி: செல்வமணிக்கு மொட்டை
நடிகை ரோஜா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அவரது கணவர் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். 
ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட அவர், மூன்றாவது முறை வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதனையடுத்து, கணவர் இயக்குனர் செல்வமணி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று ரோஜா திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், ரோஜா வெற்றி பெற்றதற்காக கோவிலில் செல்வமணி மொட்டை போட்டு முடிகாணிக்கை செலுத்தியுள்ளார்.
பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறுகையில், நகரி தொகுதியில் என் வெற்றிக்காக கட்சி தொண்டர்களும் எனது குடும்பத்தினரும் கடுமையாக உழைத்தனர் என்றும் அவர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.