பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014


தொண்டர் சேவையாகவே இராணுவத்துக்கு யாழ்.இளைஞர்கள் -அரச அதிபர் தெரிவிப்பு 
news
 யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கை சரியா என்ற கேள்வி ஒன்றை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எழுப்பினார்.
 
இன்று காலை 9.30 மணியளவில் யாழ்;.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்தக் கேள்வியை யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் எழுப்பினார்.
 
மேற்படி இந்தக் கேள்விக்கு பதிலளித்த யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போர்; தொண்டர் சேவை அடிப்படையில்  இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை நன்மையை பெற்றுத் தரும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள் கலந்து கொண்டிருந்தனர் அவர்களுக்கும் இதன் நோக்கத்தை இராணுவ உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.