பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2014


ஜெ., சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்கஇடைக்கால தடை
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சொத்து லெக்ஸ் நிறுவன வழக்கு நிலுவையில் உள்ளதால்
விசார ணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்து இருந்தார்.  

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜுன் 6 ஆம் தேதி வரை விசாரிக்க  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் மற்றவர்களின் வழக்கை விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, இந்த வழக்கிற்கு தடை கோரிய ஜெயலலிதாவின் மனு பெங்களூரு நீதிமன்றத்தில் ஏற்க னவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.