பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014


கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் கடத்திய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மும்பை நோக்கி செல்ல தயாராகவிருந்த நிலையில் இவர்கள் மூவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
சுமார் 12 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் கடத்திச் செல்ல முயன்றவேளை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு கிலோ 400 கிராம் நிறையுடைய 24 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களின்ம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.