பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014


அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
நாட்டில் பெருகிவரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுப்பதில் அரசாங்கம் இயலாமையை காட்டிவருகிறது என்பதை சுட்டிக்காட்டியே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில் 26 ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். போதைவஸ்து வர்த்தகத்தில் இலங்கை மத்திய தளமாக இயங்கிவருகிறது.
இலங்கையை பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் விற்பனைக்காக, கடத்தலுக்காக பயன்படுத்துவதாக ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.