பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014


பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்: கல்வி அமைச்சர்
பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலவச கல்வியை சீர்குலைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார்.
இலவசக் கல்வியை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனத்துடனும் அரசாங்கம் உடன்படிக்கை கைச்சாத்திடவில்லை. அவ்வாறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தால் அதனை ரணில் விக்ரமசிங்க நிரூபிக்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றில் பங்கேற்கத் தயார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொண்டு கல்வித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பாட விதானத்தில் தொழில்நுட்ப கல்விக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.