பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014

சொகுசு பேரூந்துகளில் பெண் நடத்துநர்கள் 
news
அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும்  சொகுசு பேரூந்துகளில் பணியாற்றுவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக் குழு திட்டமிட்டுள்ளது.
 
தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின்  கீழ் உருவாக்கப்பட்டுள்ள பயணிகள் போக்குவரத்து கம்பனிகளின் கீழ் பணியாற்றுவதற்காக இவ்வாறு பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இதற்காக பெண் நடத்துநர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது . 
 
புதிதாக நடத்துநர்களும், சாரதிகளும் நியமிக்கப்பட உள்ளதோடு இவர்களுக்கு பயிற்சி வழங்கவும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன வழங்கவும் உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின்   தலைவர் ரேணுக துஷ்யந்த  பெரேரா தெரிவித்தார். 
 
தகுதியானவர்கள் ஜூன் 13 ஆம் திகதிக்கு முன் பணிப்பாளர், தேசிய போக்குவரத்து ஆணைக் குழு ,241-பார்க் ரோட், கொழும்பு-05 என்ற முகவரிக்கு  விண்ணப்பிக்குமாறு ஆணைக் குழுவின்  தலைவர்  கேட்டுக் கொண்டார்.