பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2014


இன்று நடைபெற்ற தமிழீழத் தேசிய துக்க நாளுக்கான (மே 18) ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பைத் தலைமை ஏற்று நடத்தியவர் எந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதனை நடத்துகின்றன என்பதைத் தெரிவிக்காது கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.
இது மொட்டையாக இருந்தது. மற்றது ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு என்பது பற்றிய எந்த வகையான அடிப்படை அறிவுமற்றவர் போன்று அவர் தொழிற்பட்டுக் கொண்டிருந்தார். பின்பு பேச வந்த பிரமுகர்களில் சிலர் தாங்கள் என்ன அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் வேறு சிலர்தங்கள் அமைப்பைக் கூறாமலும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்கள் அனைவரும் வரிக்குவரி "இனப்படுகொலை" என்ற வார்த்தையை உச்சாடனம் செய்து கொண்டு தேசிய துக்க நாளுக்கு வாருங்கள் என்று பேசியது முரண்பாடாக இருந்தது. கடந்த நான்கு வருடங்களாக "தேசிய துக்க நாள்" என்ற விடயம் கனடாவில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தத் துக்க நாள் தொடர்பான வைவபவங்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அனைவரும் ஒற்றுமை பற்றிப் பேசிக்கொண்டு வேறுபட்ட தலைப்புகளில் செயற்படுவது இவர்கள் சொல்லும் ஒற்றுமையைக் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளை ஏகோபித்த அமைப்பு என்று சொல்லப்படுவது அனைத்துக் கருத்தாளர்களையும் அரவணைக்க வேண்டியதும் ஜனநாயக மயமாக்கப்படுவதும் அவசியமாகிறது. ஆயுட்காலத் தலைமைகள் வரலாற்றைத் தேக்கி வைத்து விடும். எதேச்சதிகாரத்தைக் கட்டமைத்து உட்கட்சிச் சதியில் பலரது மண்டைகளை உருள வைத்துவிடும். இங்குதான் ஊன்றிக் கவனித்தலும் உறுதியான கருத்துக்களை அச்சமின்றி முன் சொல்லுதலும் அவசியமாகிறது.நன்றி முரளி அண்ணா