பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2014

இலங்கை குறித்த விசாரணைக்குழு 10 இல் அறிவிப்பு! 
 இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை எதிர்வரும் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளதாக சிங்கள ஊடகம்
ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
எதிர்வரும் 10ம் திகதி மனித உரிமைப் பேரவையின் சாதாரண அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக விசாரணைக் குழு நியமிக்கப்பட உள்ளது.
 
வடக்கிற்கு சென்று விசாரணை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்காது என்ற காரணத்தினால் இவ்  விசாரணைக்குழு ஜெனீவாவில் இருந்து விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
விசாரணைகளில் சாட்சியமளிக்க 21 பேர் ஆயத்தமாகி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் அண்மையில் 13 பேர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றினை நியமிக்க உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.