பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2014


சென்னை சவுகார்ப்பேட்டையில் தீ விபத்து: 14 வாகனங்களில் வந்த வீரர்கள் 4 மணி நேரம் போராட்டம் 
சென்னை சவுகார்ப்பேட்டை நாராயணப்பா தெருவில் உள்ள குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடோனில் வாசனை திரவியம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள் இருந்துள்ளது. 

தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் 14 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க போராடினர். குடோன் அமைந்துள்ள இடம் குறுகலான தெரு என்பதால் தீயை அணைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. அங்கு கடும் புகை சூழ்ந்தது. 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.