பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2014

பாராளுமன்றில் முன்னாள் விடுதலைப் போராளிகள் 
news
 வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 140 பேர் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.

 
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி 140 பேரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
 
இன்றைய பாராளுமன்ற அமர்வின் ஆரம்ப நிகழ்வு முதல் சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் பார்வையிட்ட அவர்கள் இன்றைய தினமே காலி - அம்பாந்தோட்டை மற்றும் தெனியாய ஆகிய பிரதேசங்களுக்கு பயணிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
 
மேற்படி பிரதேசங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்கு சிநேகபூர்வமாக விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தனர்.