பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2014

news
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 17 வயது பெண்ணை திருமணம் முடிக்கவுள்ளார். இவரது திருமணம் இந்த மாதம் நடக்வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
 
கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஹரிபுரைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தாக் கானை அக்தர் குடும்பம் கடந்த வருடம் ஹஜ்ஜில் சந்தித்தது. அப்போது முஸ்தாக் கான் மனைவியிடம் தங்களது 39-வயது மகனான சோயிப் அக்தருக்கு பொருத்தமான பெண் இருந்தால் சொல்லவும் என்று கேட்டுக்கொண்டனர். 
 
பாகிஸ்தானுக்கு திரும்பிய பின்னரும் அவர்களது தொடர்பு தொடர்ந்தது. இறுதியில் அவர்கள் ருபாப் என்ற பெண்ணை அக்தருக்கு பேசி முடித்துள்ளனர். ருபாப்-க்கு 17 வயது நிரம்பிய பெண். அவருடன் உடன்பிறந்தவர்கள் 3 சசோதரர்களும், ஒரு தங்கையும் உள்ளனர். திருமணத்திற்காக தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு 12-ம் திகதி அக்தர் செல்லவுள்ளார்.