பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2014


ஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
ஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஈராக்கில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றினர். ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தில் கடந்த 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 190 பேரை சுட்டுக்கொன்றதாக செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு, கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 
தீவிரவாதிகளின் பிடியில் இருந்து திக்ரித் நகரை மீட்க ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.