பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2014


 சென்னையில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்: 2 பேர் கைது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ரகசிய
தகவல் கிடைத்தது. எனவே அவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.


அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
சென்னை அண்ணாநகர் 2–வது மெயின் ரோடு ‘எப்’ பிளாக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் பானு (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மண்ணடியை சேர்ந்தவர். அங்கு அவர் விபச்சாரத்தில் ஈடுபட வைத்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். அதே போன்று சென்னை நீலாங்கரை இ.சி.ஆர். ரோட்டில் செயல்பட்டு வந்த ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து அதன் உரிமையாளர் சுராஜ் (34) கைது செய்யப்பட்டார். அங்கு விபச்சாரத்தில் ஈடுபட வைத்திருந்த வடமாநில இளம் பெண்கள் 3 பேரை போலீசார் மீட்டனர்.