பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014

20 வயது மகனின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை : யாழில் சம்பவம் 
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபோதையில் இருந்த தந்தையால் மகனின் ஆணுறுப்பு கண்டதுண்டமாக வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளது.
 
குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் மதுபோதையில் இருந்த தந்தை மகனின் ஆணுறுப்பை உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தலினால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
இந்த சம்பவத்தில் ஈவினை மேற்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞன் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் 30  இலக்க விடுதியில் சிகிச்சைபெற்று வருகின்றான்.
 
இந்த நிலையில் குறித்த இளைஞனின் தந்தையை சுன்னாகம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.