பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2014


அளுத்கம, பேருவளை, சம்பவம்: மேலும் 30 பேருக்கு வலை விரிப்பு
 


பேருவளை, அளுத்கம சம்பவங்களுக்கு காரணமான மேலும் 30 பேரை தேடி பொலிஸார் வலை விரித்தி ருப்பதாக
பொலிஸ் பேச்சாளர் அத்தி யட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, ஜுன் 15 ஆம் திகதி மேற்படி பிரதேசங்களில் பதற்ற நிலை உருவாக நேரடி காரணமாக விருந்த 08 பேரை கைது செய்த பொலிஸார் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களையும் கைப்பற்றி யுள்ளனர்.
பெந்தோட்டையிலுள்ள இரண்டு நகைக் கடைகளிலிருந்து கொள்ளையடிக் கப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ரூபாக்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த நகைகளே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இனப் பதற்றத்துக்கான பின்னணியில் கொள்ளைக் கும்பல் செயற்பட்டு வந்துள்ளமை சீசீரிவி ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த 15 ஆம் திகதி முதல் இதுவரையில் பேருவளை, அளுத்கம சம்பவங்கள் தொடர்பில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 55 பேர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சம்பத்திற்கு காரணமான பிரதான சூத்திரதாரிகள் இருவர் ஏற்கனவே மத்துகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.