பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2014


முதல் வெளிநாட்டு பயணம்: பூடான் செல்கிறார் நரேந்திர மோடி
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 3 வாரங்களுக்கு பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் அவருடன்,
வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரும் செல்கிறார்கள்.

அங்கு பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியெல் வாங்சுக், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார். அவர்கள் இருநாட்டு உறவுகளையும், ஒப்பந்தங்களையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசுகிறார்கள். 
பூடான் நாட்டு பாராளுமன்றம் மற்றும் தேசிய கவுன்சில் கூட்டுக்கூட்டத்திலும் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார்.