பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2014


தவறான 'சுன்னத்து' செய்கையால் 3மாத குழந்தை பரிதாப மரணம்!- மாளிகாவத்தையில் சம்பவம்
'சுன்னத்து'  செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த மொகமட் ஹம்டான் என்ற சிசுவே அரைகுறை சுன்னத்துச் செய்த நிலையில் மோசமாகப் பாதிக்கப்பட்டு, கொழும்பு லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருந்து விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான மொஹமட் நியாஸ் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சுன்னத்துச் செய்யும் மருத்துவராகச் செயற்பட்ட இவரின் கவனயீனத்தினாலேயே சிசு பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.