பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2014


இலங்கையின் மனித உரிமை மீறல்கள்: 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச விசாரணைக்குழு அறிவிப்பு
 


இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கை
இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்தது.

அதன்படி மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை ஐ.நா. சபை அமைத்துள்ளது. 
பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்து நாட்டின் முன்னாள் அதிபரும், நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். 
முக்கியத்துவம் வாய்ந்த சவாலான இந்த விசாரணையை மேற்கொள்ள மூன்று நிபுணர்களும் இசைவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை அரசு இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாகவும் நவிபிள்ளை கூறியுள்ளார்.