பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2014


மலையகத்தில் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு- உதவிகளுக்கு தொண்டமான் அழைப்பு
மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 4 12.06.2014 அன்று பிற்பகலிலிருந்து திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
அதிக மழை காரணமாக டெவோன் நீர்வீழ்ச்சியிலும் சென்கிளயார் நீர்வீழ்ச்சியிலும் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியும் நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு லக்ஸபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகளும் விமேலசுரேந்திர நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனிலிருந்து கினிகத்தேன வரையும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி
வழுக்குவதற்கு அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகனசாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
இந்த வெள்ளத்தினால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி மேலும் தெரிவிக்கின்றார்.
உதவிகளுக்கு தொண்டமான் அழைப்பு
மலையகத்தில் அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவிகள் வேண்டுமானல் உடனடியாக இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
(தொலைபேசி இலக்கம் - 0717887722, 0717399999, 0727200000, 0727887722) இது தொடர்பாக ஹட்டனில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்துரையாடல் ஒன்று 12.06.2014 அன்று பிற்பகல் இடம்பெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ், இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு அமைச்சர் நீரில் மூழ்கியுள்ள இடங்களை பார்வையிட்டதோடு மக்களிடமும் கலந்துரையாடியமையும் குறிப்பிடதக்கது.