பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2014


நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்
நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் (57) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
மறைந்த கொடுக்காபுளி செல்வராஜ் மாங்காடு அருகில் உள்ள பரணிபுத்தூரில்
வசித்து வந்தவர். "நானே ராஜா நானே மந்திரி', "பாட்டி சொல்லைத் தட்டாதே', "அண்ணா நகர் முதல் தெரு' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்கு பரணிபுத்தூர் மயானத்தில் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூன் 13) நடைபெறுகிறது.
கொடுக்காபுளி செல்வராஜுக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை.