பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2014


இமாச்சலப்பிரதேசத்தில் பியாஸ் நதியில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்களை தேடும்பணி தீவிரம்
ஹைதராபாத் பொறியியல் கல்லூரி ஒன்றில் இருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 60 பேரில் 25 பேர் கடந்த ஞாயிறன்று பியாஸ் நதியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது
, லார்ஜி நீர்மின்நிலைய நீர்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதுவரை 8 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணியில் கிட்டதட்ட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மாணவர்களை தேடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5-ஆவது நாளாக நீடிக்கும் இப்பணிகளில் கூடுதலான மீட்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஹைதராபாத்தில் இருந்து 15 நீச்சல் வீரர்கள் அனுப்பப்பட்டனர்.