பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014



அளுத்கம பேருவளை  தர்காநகர் -8 முஸ்லிம்கள் சுட்டுக்கொலியா 51 கடைகள் எரிப்பு கொள்ளை 5 பள்ளிவாசல்கள்  சேதம் 2 முற்றாக அழிப்பு 
அளுத்கம பகுதியில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.

தென்னிலங்கை அளுத்கமையில் கடந்த ஞாயிறு தொடக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இதன் எதிரொலியாக எட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு சுமார் நாற்பது வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இரண்டு பள்ளிவாசல்கள் தாக்கியழிக்கப்பட்டு, மேலும் மூன்று பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொலிசாரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட பொதுபல சேனாவினருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நடந்து கொண்டனர்.
இதனால் வன்முறை தீவிரமாகப் பரவியதை அடுத்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் செய்தியறிக்கைகள் காரணமாக இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. இதன் காரணமாக கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தற்போது அளுத்கமை வன்முறைகள் தணிக்கப்பட்டு, பாதுகாவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்குச் செல்ல பொதுமக்கள் அச்சம்- 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பள்ளிவாசல்,பாடசாலைகளில் தஞ்சம்