பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2014

உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் - டோனிக்கு 8 வது இடம் 
உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் டோனி 8 வது இடத்தில் உள்ளதாகவும், அவர் ஆண்டுக்கு 26 மில்லியன் அமெரிக்க டாலர்களை விளம்பரம் போன்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பெறுவதாகவும் அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
 
டோனி தனது விளையாட்டு போட்டிகள் மற்றும் வெற்றிகள் மூலமாக பெறும் சம்பளத்தொகை ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர்கள் மட்டுமே என்றும், ஆனால் அதிலிருந்து ஆறரை மடங்கு அதிகமான தொகையை வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட இதர ஒப்பந்தங்கள் மூலம் சம்பளமாக பெறுவதாக அந்த இதழ் தெரிவித்துள்ளது.
 
2013 ஆம் ஆண்டு பிற்பகுதியில், ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகத்துடன் டோனி ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த ஆண்டில் அவர் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களின் மூலமான மதிப்பு 4 மில்லியன் டொலர் என கூறப்பட்டது. அன்றிலிருந்து டோனியின் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கூறிய நிறுவனத்தின் மூலமாகவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவரது வர்த்தக ஒப்பந்த வருமானம் தற்போது ஆண்டொன்றுக்கு 24 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.