பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2014

புகைத்தல், மதுவுக்கு எதிராக சாவகச்சேரியில் பேரணி 
சர்வதேச மது மற்றும் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை 9. 00 மணியளவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமாகி சாவகச்சேரி நகர பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

 
தென்மராட்சிப் பிரதேச சமுர்த்தி மகா சங்கத்தினர், தென்மராட்சி வலய பாடசாலை மாணவர்கள்  சாவகச்சேரி மதுவரித் தினைக்களம் ஆகியன இணைந்து இந்த எழுச்சிப்பேரணியை நடாத்தியுள்ளனர்.
 
போதைப்பொருளை இல்லாது ஒழித்து நாட்டை கட்டியெழுப்பி,வாழ்வினை எழுச்சிபெறச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மக்களை விழிப்பூட்டும் வகையிலான சுலோகங்களை தாங்கியிருந்தனர்.
 
இதன் ஊர்வலத்தின் போது  தென்மராட்சி வலய பாடசாலை மாணவர்களால் எமது மதிப்புக்குரிய உறவுகளே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்கள்  வழங்கப்பட்டிருந்தது.
 

 
குறித்த பேரணியில் சமுர்த்தி திணைக்கள உதவிப்பணிப்பாளர் மகேஸ்வரன், உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி மதுவரி  நிலைய பொறுப்பதிகாரி இ. பிரதாபன், அதிகாரிகள், தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர்,  பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.