பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014


மீனவர் கைது நீடித்தால்....! பாஜக இலங்கைக்கு எச்சரிக்கை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்தால் மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் தான் ராஜபக்ஷ பிரதமரின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார். ஆனால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் இலங்கைக்கு எந்த மொழியில் கூறினால் புரியுமோ அந்த மொழியில் பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது எனவும் எச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.