பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014


கொழும்பில் கனமழை.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின
கொழும்பில் பல பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 
தும்முல்லை, கறுவாத்தோட்டம், பௌத்தலோக மாவத்தை, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை உட்பட பல பிரதேசங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.
கொழும்பில் இன்று மதியம் முதல் தொடர்ந்தும் கனமழை பெய்து வருகிறது.

கொழும்பில் இதுவரை 57 மில்லி லீற்றர் மழை பெய்துள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.