பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2014

வேகப்பந்து வீச்சாளர்களோடு டெஸ்சில் களமிறங்கும் இலங்கை
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர்  இங்கிலாந்து அணிக்கெதிராக  டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாத்தில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்
.
 
எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகளை உள்ளடக்கிய டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.
 
விக்கட் காப்பாளர்  பிரசன்ன ஜயவர்தன மற்றும் தம்மிக பிரசாத் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பபட்டு்ள்ளனர்.
 
இதேவேளை உபாதை காரணமாக நீண்ட காலமாக அணியிலிருந்து விலகியிருந்த சானக வெலகெதர மீண்டும் அணி்க்கு உள்வாங்கப்பட்டுள்ளார்
 
ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, ஷமின்த எரங்க, நுவன் பிரதீப், சானக வெலகெதர மற்றும் தம்மிக பிரசாத் ஆகியோர் இலங்கை டெஸ்ட் பந்து வீச்சுப் பிரிவை பலப்படுத்தவுள்ளனர்,
 
லஹிரு திரிமான்ன உப தலைவராக செயற்படவிருக்கும் முதலாவது  டெஸ்ட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.