பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2014

உலககிண்ண போட்டிக்கு தாய்லாந்து சலுகை 
உலககிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நிலையில் கால்பந்தாட்ட இரசிகர்களுக்காக தாய்லாந்து அரசாங்கம் பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 
உலகக்கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டிகள் காண்பிக்கப்படும் அலைவரிசைகளுக்கான கட்டணங்களை அறவிட வேண்டாம் தொலைக்காட்சி சேவை கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் சுமார் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி கால்பந்தாட்ட போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை பெற்றுள்ளன.
 
இந்நிலையில் இடைக்கால அரசாங்கத்தின் இநத அறிவிப்பானது தொலைக்காட்சி சேவை கட்டுப்பாட்டாளர்களுக்கு பெரும் நட்டத்தை விளைவிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.