பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014


அமெரிக்காவின் போர்ட்லாந்தில் ஈழத்தவருக்கும் குடியுரிமை

அமெரிக்காவில் இடம்பெற்ற ரோஸ் ஃபெஸ்டிவலின் போது, இலங்கையர்கள் சிலருக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் போர்ட்லாந்து பகுதியில் நேற்று மதியம் பி.ப 2 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது அமெரிக்காவின் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால், இலங்கை, எகிப்து, சோவியத் ஒன்றியம், தென் கொரியா, கனடா மற்றும் மெக்சிக்கோ போன்ற நாடுகளைச் சேர்ந்த 20 பேருக்கு அமெரிக்கக் குடியுரிமைகள் வழங்கப்பட்டன.
“நாங்கள் இங்கேயே வாழ்ந்து, தங்கள் குடும்பத்தை இங்கேயே வளர்த்ததாகவும், அதனால் குடியுரிமைகள் பெற அனைத்து தகுதியும் உள்ளதாகவும், அதற்காக நன்றி தெரிவிப்பதாக, குடியுரிமை பெற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்