பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014

ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு ; இராணுவம் குவிப்பு 
news
 அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர்.
 
இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
 
களுத்துறை மாவட்டம் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் கண்டனப் போராட்டங்களையும் கதவடைப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றனர். 
 
 
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இன்று கதவடைப்பை மேற்கொள்வதென தீர்மானித்த யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் இது தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை தமது பகுதிகளில் ஒட்டினர். 
 
 
அதேவேளை கறுப்புக்கொடிகளையும் பறக்கவிடுவதற்கான முனைப்பில் கடந்த நேற்றிரவு ஈடுபட்டனர். அந்த நேரம் அங்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் துண்டுப் பிரசுரங்களையும் கறுப்புக்கொடிகளையும் பறித்து தமது வாகனங்களில் போட்டுக்கொண்டு சென்றதுடன், தம்மை கைது செய்யப்போகின்றனர் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். 
 
திட்டமிட்டபடி இன்று அந்தப் பகுதியில் மக்களால் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
 
இதேவேளை, யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதிக்கு அண்மையில் தற்காலிகமாக குடியமர்ந்து யாழ்ப்பாணத்தில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிங்களக் குடும்பங்கள் சிலவற்றுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் தெரியவருகிறது.