பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2014

ஆப்கான் ஜனாதிபதி வேட்பாளர் குண்டு வெடிப்பில் மயிரிழையில் தப்பினார்
news
 ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலை தலிபான் போராளிகள் குழப்பலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் முன்னணி வேட்பாளரின் வாகனத்தொடரணியை குறிவைத்து காபூலில் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
இத்தாக்குதல் சம்பவத்தில் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.அதேவேளை முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அப்துல்லா  மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
 
மேலும் அடுத்த வாரமளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது