பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2014



இன்றைய தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, ஸ்தலத்திற்கு விஜயம் செய்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப
நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கான ஆதரவை தெரிவித்தார்கள்.
இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் திரு. முத்தையா கண்ணதாசன்,செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம், வவுனியா மாவட்ட வெகுஜன அம...ைப்பின் தலைவர் தேவா, தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அவர்களுக்கான ஆதரவை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் போது வட மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களிடம் மாவட்ட தொழில்சங்க சம்மேளன உறுப்பினர்களும் தொழிலாளர்களின் சார்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு தற்காலிகமாக வேலைவாய்ப்பினை வழங்குவதாகவும் பின்னர் நிரந்தர நியமனத்துக்கு முயற்சி செய்வதாகவும் உதவி ஆணையாளர் அவர்களால் உறுதி அளிக்கப்பட்டபின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.