பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2014


ரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அனுப்பி வைப்பு
வடமத்திய மாகாணத்தின் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ரஞ்சித் ஸ்ரீவர்த்தன மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் நிர்வாக கட்டிடத்துக்குள் மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இருந்து 28 மாணவர்கள் விரிவுரை தடைக்கு உட்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கான தடையை பல்கலைக்கழகம் விதித்துள்ளது.
இந்தநிலையில் இந்த தடையை நீக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை முதல் நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.
எனினும் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாமையை அடுத்தே துணைவேந்தர் உட்பட்டவர்களை மாணவர்கள் தடுத்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.