பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014

இந்திய நிதியுதவியில் யாழில் கலாசார மத்திய நிலையம் 
 பாரம்பரிய கலாசார அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் மிக நவீன வசதிகளுடன் கூடிய கலை மற்றும் கலாசாரம் தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும்
வகையிலான கலாசார மத்திய நிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.
 
இந்திய உதவியிலான 1.2 பில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கலாசார மத்திய நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்இ இலங்கையின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் இந்தியாவின் சார்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சிங்ஹா ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாண நூலகத்துக்கு அருகாமையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மத்திய நிலையத்தில் நாட்டிய மேடை மற்றும் மிதக்கும் மேடை என்பன உள்ளடக்கப்படவுள்ளன.
 
இதன் மூலம் வட மாகாணத்தின் விசேடமாக யாழ்ப்பாண மக்களின் கலாசார உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாக்கப்படும் நிலையில்  நாட்டின் ஏனைய மக்களின் கலாசார தொடர்புகள் வலுவடைவதுடன்இ யாழ்ப்பாணத்தின் பழமை வாய்ந்த கலாசார மரபுரிமைகளும் பேணப்படும்.
 
மேலும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் 600 ஆசனங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் கலை அரங்கம் இணைய ஆய்வு வசதிகள்  பல்மொழி நூலகம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன.
 
இலங்கை வாஸ்து சாஸ்திரவியலாளர்கள் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தேசிய திட்டமிடல் போட்டியில் முன்வைக்கப்பட்ட 29 திட்டங்களிலேயே இந்த மத்திய நிலையத்துக்கான திட்டம் தெரிவு செய்யப்பட்டது. 
 
யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பி. குமரன்இ முதல் செயலர் ஜஸ்டின் மொஹான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அனுராத குமாரசிறி மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பாஷ்வர குணரட்ன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.