பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014


ஐ.நா விசாரணைக் குழு தொடர்பான நாடாளுமன்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தொடர்பில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் ஐக்கிய நாடுகள் விசாரணைகள் குழு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என ஆளும் கட்சி நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
இது தொடர்பான வாக்கெடுப்பு சற்று முன்னர் நடைபெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 144 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 10 வாக்குகள் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் எதிராக வாக்களித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் விவாதத்தை புறக்கணித்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி அவையில் பிரசன்னமாகியிருந்த போதும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.