பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2014

பொன்சேகா இப்போது இராணுவ ஜெனரல் அல்ல: அரசாங்கம்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இராணுவ ஜெனரலாக ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,
பொன்சேகாவுக்கு எதிரான சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதால், அவர் இராணுவப் பட்டத்தை இழந்தார் எனக் கூறியுள்ளார்.
படைகளின் தலைமை கட்டளை அதிகாரியான சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஜனாதிபதி 2010 ஆம் ஆண்டு கையெழுத்திட்டார்.
இதனையடுத்து அவரது ஜெனரல் பட்டம், இராணுவத்தில் பெறப்பட்ட பதக்கங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பன பறிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இராணுவ நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இரண்டு ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அவரது சிவில் உரிமைகளை புதுப்பிக்க முடியாது போனது.
அதேவேளை பொன்சேகாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த இராணுவத்தினர் அல்லது பொலிஸார் இலக்கு வைக்கப்படவில்லை எனவும் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.