பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014


இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கா விட்டாலும் விசாரணை நடத்தப்படும்!- ஐ.நா. திட்டவட்டம் - சென்னையில் முன்னெடுக்குமாறு ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை
மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக இலங்கைக்கு செல்லாமலேயே முழுமையான விசாரணைகளை நடத்த முடியும் என்பதால் விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு செல்ல அனுமதிக்கப்படா விட்டாலும், குறித்த விசாரணைகள் கண்டிப்பாக நடத்தப்படும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ரொபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரதிநிதிகளை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
எனினும் இந்த நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விபரமான அறிக்கைகளை தயாரிக்க முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் செல்ல அனுமதித்தால் அது சிறந்த நடவடிக்கையாக அமையும் எனவும் கொல்வில் குறிப்பிட்டுள்ளார்.