பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2014


வெள்ளவத்தை கொள்ளைச் சம்பவம்: சந்தேகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுலகம் தெரிவித்தது.
அண்மையில் வெள்ளவத்தைப் பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதி கடத்திச் செல்லப்பட்டு அவரிடமிருந்த 14 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பின்னர் குறித்த நபர் வீதியில் கைவிடப்பட்டிருந்தார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.