பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2014

யாழ்.மாவட்டத்தில் ஆதார வைத்தியசாலைகளாக இதுவரை நான்கு மட்டுமே தரமுயர்வு -செயலாளர் ரவீந்திரன் 
 யாழ்.மாவட்டத்தில் ஆதார வைத்தியசாலைகளாக நான்கு வைத்தியசாலைகளே இதுவரை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
ரவீந்திரன் தெரிவித்தார்.
 
இன்று இடம்பெற்ற தொல்புரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் அந்த வகையில் ஆதார வைத்தியசாலைகளாக தெல்லிப்பளை, சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகியவற்றுடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையையும் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதமாக இடம்பெற்று வருகின்றது என அவர் தெரிவித்தார்.