பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2014


விமல் வீரவன்சவின் கட்சியில் இருந்து மேலும் இருவர் விலகல்
இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து மேலும் இருவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே விமல் வீரவன்சவின் கட்சியின் ஊவா மாகாணசபை உறுப்பினர்கள் இருவரில் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இணைந்தனர்.
இந்தநிலையில் இன்று மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான சுதத் மத்துகமகே மற்றும் தொங்கொட பிரதேச சபையின் உறுப்பினர் கே.எச்.விக்ரமசிங்க ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையப் போவதாக இன்று களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அறிவித்துள்ளனர்.
எனினும் விமல் வீரவன்ச, 13வது அரசியல் திருத்தத்தை ரத்துச் செய்தல் உட்பட்ட தமது முன்னணியின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்காவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்து வருகிறார்.