பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2014

கிளி.மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம் 
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர் ஆகியோருக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக
சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் ஆணையாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன்போதே ஆணையாளர் இதனை தெரிவித்தார்.

அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 175 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் 29 முகாமையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

எனினும் 8 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் 3 முகாமையாளர்களுக்குமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்