பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2014

பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் முடக்கம் 
பொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர்களின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
 
அளுத்மக, பேருவளை பகுதிகளில் பெரும் வன்முறைகளை அடுத்து பொதுபல சேனாவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டிருந்ததுடன், தற்போது, அதன் அங்கத்தவர்களின் பேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
''எனது பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜூன் 25 ஆம் திகதி எனது பேஸ்புக் பக்கத்துக்கு நான் சென்றேன். ஏனைய அங்கத்தவர்களின் பேஸ்புக் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது' என பொது பல சேனாவின் பேச்சாளர் திலந்த விதானகே ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரோவும் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.