பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2014

மத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க பிரதமர் மோடி தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் 100 நாட்களில் செய்யவிருக்கும் பணிகள் குறித்து

அறிக்கை தாக்கல் செய்யும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, தங்களின் உறவினர்கள் யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ள கூடாது என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க கூடாது என பிரதமர் அலுவலகம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் பிரதமர் அலுவலகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.