பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014



நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை

நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர
சிகிச்சைப்பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்தபோது, ‘பொட்டாசியம்’ குறைபாடு இருப்பதையும், அதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.


இதையொட்டி, மனோரமாவுக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனோரமா நல்ல சுயஉணர்வுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.