பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2014


வவுனியா மாணவன் தெஹிவளையில் சடலமாக மீட்பு
வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், தெஹிவளை அல்விஸ் வீதியிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தின் கீழிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், கணனி விஞ்ஞானம் துறையில் பயின்றுகொண்டிருப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த குறித்த நபர் கட்டத்திலிருந்து கீழே விழுந்துவிட்டாரா அல்லது கொலைசெய்யப்பட்டு கீழே கொண்டுவந்து போடப்பட்டாரா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தில் கீறல் காயங்கள் சில இருப்பதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.