பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2014

நாங்கள் கிண்ணத்திற்கு தகுதியற்றவர்கள்: விரக்தியில் ரொனால்டோ 
நாங்கள் எப்போதும் உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக திகழ முடியாது என போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.


தகுதிச் சுற்று கால்பந்தாட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்து ஸ்வீடன் அணியை 3-2 என்று வீழ்த்தினார். இதனால்தான் நடப்பு உலகக்கிண்ணத்திற்கு போர்த்துக்கல் அணி தகுதி பெற்றது.

ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் போராடி ஆட்டத்தை டிரா செய்தது.

இது பற்றி ரொனால்டோ கூறுகையில் போர்த்துக்கல் உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக ஒரு போதும் சொல்ல முடியாது.

நாங்கள் உலக சாம்பியன்களாவோம் என்று ஒரு போதும் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. நாம் நமது எல்லைகளை வரையறை செய்து கொள்ளவேண்டும். உலகக்கிண்ணத்திற்கு தகுதி பெற்றதே பெரிய விடயம்.

எங்களை விட சிறந்த அணிகளும் சிறந்த வீரர்களும் உள்ளனர். சில விடயங்களை நம்மால் செய்ய முடியாதுஇ வேகமாக ஓடுவதுஇ இன்னும் தரத்தைக் கூட்டுவது போன்றவற்றை எங்களால் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.