பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014


குழந்தை தொழிலாளர்கள் விவகாரம் :இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில்அதிகாரிகள் விசாரணை

சென்னை அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் சினிமா டைரக்டர் கங்கை அமரன் வீடு உள்ளது. இங்கு 2 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிவதாக
குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் செய்யப்பட்டது. கங்கை அமரன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் இந்த புகாரை தெரிவித்து இருந்தார்.


இதையடுத்து நேற்று மாலை குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகளும் அடையாறு போலீசாரும் கங்கை அமரன் வீட்டில் விசாரணை நடத்தினர்.
அப்போது விழுப்புரத்தை சேர்ந்த அக்காள்– தங்கைகளான 2 சிறுமிகள் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கங்கை அமரனின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பெற்றோர்களின் விருப்பப்படி 2 சிறுமிகளும் வேலை பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி விழுப்புரத்தில் உள்ள சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமிகளின் வயது சான்றிதழ்களுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்று காலை வரை சிறுமிகள் 2 பேரும் கங்கை அமரன் வீட்டில்தான் உள்ளனர். பிற்பகல் வயது சான்றிதழ்களுடன் பெற்றோர் வந்த உடன் அவர்களிடமும், கங்கைஅமரன் வீட்டில் உள்ளவர்களிடமும் இன்று 2–வது நாளாக விசாரணை நடக்கிறது.
இதில் சிறுமிகள் இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் பெற்றோர்களிடம் திரும்ப ஒப்படைக்கபடுவர். 18 வயது நிரம்பி இருந்தால் கங்கை அமரன் வீட்டிலேயே அவர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.