பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2014


நீர்கொழும்பில் புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
நீர்கொழும்பு – மாநகர சபை முன்றலிலுள்ள புத்தர் சிலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் எரிபொருள் மானியம் வழங்குமாறு கோரி மீனவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை குழப்பும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீனவர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்